Page:Tamil proverbs.pdf/183

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
165
  1. என்னைப்போலக் குரலும் என் அக்காளைப்போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.
    The ass boasted that there was no voice equal to his, and no gait equal to that of his elder sister.

  2. என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய், என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.
    On seeing me, thou hidest among the hemp, and on seeing my wife, thou hidest in a chatty.

ஏ.

  1. ஏகாதசிக்கு மா இடித்தாற்போல.
    Like pounding flour for Ekàdasi.
    Ekàdasi, the eleventh of December which is observed by the Hindus as a fast and therefore the preparation of food is not required. Said of something irrelevant.

  2. ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேலே.
    O fellow, put the pretended observer of Ekádasi on the car.

  3. ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.
    As a washerman’s vehicle (a donkey) carries its load.

  4. ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.
    He is indeed clever in abuse and empty talk.

  5. ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.
    If it be asked where is the way for the stubborn, it is replied, on the head of the way faring man.

  6. ஏடு அறியாதான் பீடு பெறாதான்.
    The ignorant man is not held in estimation.

  7. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
    Will the word suraikai a gourd serve as a curry?