Page:Tamil proverbs.pdf/184

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
166
பழமொழி.
  1. ஏணிக்கொம்புக்கு கோணக்கொம்பு போடலாமா?
    Is a crooked pole fit for a ladder?

  2. ஏணைக்கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா?
    Do you cut a crooked stick for a litter.

  3. ஏண்டா தென்னமரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றான்.
    You fellow! why did you go up the Cocoanut tree? when thus addressed, he replied, I went to get grass for the calf.

  4. ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.
    O Garuda, are you well? I should be well enough if I were in the place where I ought to be.

  5. ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய் ? என் அவசரம் உனக்குத் தெரியுமா?
    What! do you steal in broad day light? He replies, do you know how pressing my necessities are?

  6. ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.
    Why, man, have you got up into the Tamarind tree? he replied, to pluck grass for my kitten.

  7. ஏண்டா முடிச்சு அவிழ்க்கிறாய்? என்பசி உனக்குத் தெரியுமா?
    Why, you fellow, do you untie the knot? Do you know how hungry I am?

  8. ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டாச்சே.
    Well, my girl, have you cut the grass? she replied, it was tied up before one could snap his fingers.

  9. ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்.
    Why, my girl, do you faint? I have not had rice enough.