Page:Tamil proverbs.pdf/185

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
167
  1. ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.
    Why my girl do you squat! For want of sufficient rice.

  2. ஏது பிரியம்? இல்லாதது பிரியம்.
    What do you wish! That which I have not.

  3. ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
    Why two wives to one who has nothing?

  4. ஏதென்று கேட்பாரும் இல்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.
    None to enquire, none to help.

  5. ஏரி உடைகிறதற்குமுன்னே அணை போடவேண்டும்.
    Before the bund bursts, it must be strengthened.

  6. ஏரி நிறைந்தால் கரை கசியும்.
    If the tank be full, its bank will be moist.

  7. ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.
    When the tank overflows, the flood will spread all around.

  8. ஏரி மிதந்தால் இடையனை மதியாது.
    If the hunch of the ox grow high, he will not fear his keeper.

  9. ஏரியின் நீரைக் கட்டுதல் அரிது உடைத்தல் எளிது.
    It is difficult to confine the water of a tank, but easy to break the bund.

  10. ஏரியின் தண்ணீர் இதோ சூரியதேவா?
    O divine sun, behold the water of the tank?

  11. ஏரியோடு பகைகொண்டு சவுசம் செய்யாதிருக்கிறதா?
    Do you abstain from ablution because you are dissatisfied with the tank?

  12. ஏர் உழுகிற பிள்ளை இளைத்துபோனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.
    Never mind, should the youth at the plough become lean, take care of the girl who has received the nuptial presents.