Page:Tamil proverbs.pdf/196

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
178
பழமொழி.
  1. ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.
    One grain of pepper and four grains of salt will suffice.

  2. ஒரு முழுக்கிலே மண் எடுக்கிறதா?
    What! is it to take up the soil by diving once?

  3. ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
    A family divided against itself will perish together.

  4. ஒருவன் அறிந்தால் உலகம் அறியும்.
    If known to one, the world may know it.

  5. ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.
    A secret known to one may spread through the world.

  6. ஒருவனுக்கு இருவர் துணை ஒருவனை அறிய இருவர் வேண்டும்.
    Two men may help one, two are necessary that one may be known.

  7. ஒருவரும் அறியாத உச்சித நாமன்.
    One of illustrious name unknown to any.

  8. ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான் பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.
    He who kills one person immediately suffers death, he who kills many is rewarded with a crown.

  9. ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா ஒன்றி மரம் தோப்பாமா?
    Is it worth being to be an only offspring? Is a single tree a tope a grove?

  10. ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா?
    May you cut off a man’s head because there is a ruby in it?

  11. ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை இருவராய்ப் பிறந்தாற் பகைமை.
    When only one is born there is loneliness, when two enmity.