Page:Tamil proverbs.pdf/227

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
209
  1. கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம்.
    It is said that he who does not exaggerate when a tumult occurs will go to hell.

  2. கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா?
    In regard to a bed is the distinction of head and foot observed in a battle-field?

  3. கலகம் கலந்தால் உலகம் கலங்கும்.
    In a general insurrection universal consternation prevails.

  4. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
    Popular agitation leads to justice.

  5. கலகமே மெய்யானாற் புளுகாதவன் பாவம் .
    If an insurrection exists, it is wrong not to make it known.

  6. கலக்கந்தைக் கட்டிக் காணப் போனால் இருக்கலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்.
    When I went in rags to see her, she appeared enveloped in double the quantity.

  7. கலக் கம்பு தின்றாலும் காடை காட்டிலே.
    Though it may consume a kalam of gtain, the quail lives in the jungle.

  8. கலக்கினும் கடல் சேறாகாது.
    Though never so troubled, the sea does not become muddy.

  9. கலத்திலே சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல.
    Like holding the hand after putting rice on the plate.

  10. கலக் நெல்லுக்குக் கல உமி இருக்குமா?
    Will a kalam of paddy yield a kalam of husks?

  11. கலப் பணத்தைப் பார்க்கிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.
    The corpse of an old person is better than immense wealth.