Page:Tamil proverbs.pdf/228

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
210
பழமொழி.
  1. கலப் பால் கறக்கலாம் துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?
    A kalam of milk may be drawn; can a drop be infused into the teat?

  2. கலப் பாலுக்குத் துளிப் புரை.
    A drop of butter-milk or curds to a kalam of milk.

  3. கலப்பானாலும் பூசபூசப் பொன்னிறம்.
    Though not pure, repeated gilding will give it the colour of gold.

  4. கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போலே
    Like putting a drop of poison in a kalam of milk.

  5. கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?
    Will not a cat that has drunk a kalam of milk drink an álak?

  6. கல மா இடித்தவள் பாவியும், கப்பி இடித்தவள் புண்ணியவதியுமா?
    Is she who pounded a kalam of flour vicious, and she who pounded rolong virtuous?

  7. கலம் கலந்தால் குலம் கலக்கும்.
    When plates are interchanged, tribal marriages interchange.

  8. கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது.
    Though a kalam of chaff be pounded, it will not become rice.

  9. கல உமி தின்றால் ஒரு அரிசி தட்டாதா?
    If a kalam of chaff be eaten may hot a grain of rice turn up?

  10. கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.
    It is said that he forgot to tie the táli owing to the bustle at the wedding.

  11. கலியாணத்திலும் பஞ்சம் இல்லை, களத்திலும் பஞ்சம் இல்லை.
    No scarcity at a wedding, nor in the threshing floor.

  12. கலியாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?
    Will the woman who wept as she clung to the post of a marriage pandal at be silent when she attends a funeral?