Page:Tamil proverbs.pdf/236

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
218
பழமொழி.
  1. கள்ளன் உறவு உறவும் அல்ல, காசா விறகு விறகும் அல்ல.
    The friendship of a rogue is not friendship, nor is kásáwood fuel.

  2. கள்ளன் புத்தி திருட்டுமேலே
    The mind of a rogue is set on thieving.

  3. கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப் புத்தி.
    Even the child of a thief is characterized by thievish propensites.

  4. கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்.
    The wife of a thief is at any moment liable to become a widow.

  5. கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் காணும் குறி கேட்கலாமா?
    Can the wife of a thief be consulted as an augur for the recovery of stolen property?

  6. கள்ளனும் வெள்ளமும் ஒன்று.
    A thief and a flood are alike.

  7. கள்ளனுக்குப் பாதி வெள்ளனுக்குப் பாதி.
    One half to the rogue, and one half to the honest.

  8. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று.
    A gardener is another term for a thief.

  9. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியுமட்டும் திருடலாம்.
    If the thief and a gardener are united, one may steal till day-break.

  10. கள்ளன் கொண்ட மாடு எத்துறை போயென்ன?
    What matters it to what ferry the bull may go that has been bought by a thief?

  11. கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.
    He who points out a thief is hated by him.

  12. கள்ளி பெருத்து என்ன? காய் உண்டா நிழல் உண்டா?
    What if the kalli grow large? Has it any fruit or any shade?