Page:Tamil proverbs.pdf/253

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
235
  1. காலுக்குக் கை உதவி கைக்குக் கால் உதவி.
    The hand helps the legs and the legs help the hands.

  2. காலுக்குத் தக்க செருப்பும் கூலிக்குத் தக்க உழைப்பும்.
    A slipper suited to the foot, and labour suited to the hire.

  3. காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?
    Will a slipper that fits the foot do for the head?

  4. காலைச் சுற்றின பாம்பு கடித்தால் ஒழிய விடாது.
    The snake that has coiled round the leg will not leave without biting.

  5. காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்.
    Should winged white-ants come out in the morning the heavy rain will cease.

  6. காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர்.
    He who sleeps after day-break, and he who keeps awake in the fore part of the night are worthless.

  7. காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றி அடிக்கும்.
    If Saturn seize the feet, he will drive one round the village.

  8. காலைப் பனிக்கும் கண்விழிக்கும் ஒத்தது செல்வம்.
    Wealth is comparable to the morning dew, and the twinkling of an eye.

  9. காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.
    Dreams of bliss and premature wisdom are not lasting.

  10. கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூல் அளவே ஆகுமாம் நுண்சீலை.
    The speed of a vessel is proportioned to the force of the wind, the quality of cloth will be as the yarn used in its manufacture.

  11. கால் ஆடக் கோல் ஆடும் கோல் ஆடக் குரங்கு ஆடும்.
    The foot puts the stick in motion, as that moves, the monkey dances.