Page:Tamil proverbs.pdf/254

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
236
பழமொழி.


  1. கால் சிறிதாகில் கனல் ஊரும் கன்னியர் மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும்.
    Where there is a little wind fire will spread, where there is lust the affections will be fastened on women.

  2. கால் நடைக்கு இரண்டு காசு கை வீச்சுக்கு ஐந்து காசு.
    Two cash for walking on foot, five cash for the swing of the arms.

  3. கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?
    If one be tied cross-legged, will his weight diminish?

  4. கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?
    Can he who cannot leap over a channel leap over the sea?

  5. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
    The weight of a burden is felt by the bearer.

  6. காவல் தானே பாவையர்க்கு அழகு.
    Chastity is a feminine grace.

  7. காவேரி ஆற்றை மறிப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக சந்திரனையும் மறிப்பாயா?
    You may stay the Cauvery, but can you hinder the full moon of November if he be in Cancer?

  8. காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.
    Should the Cauvery become kanji, the dog would partake thereof by lapping.

  9. காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம்.
    The green leaves of the palm laughed because the dry ones fell off.

  10. காளிதோட்டத்துக் கற்பக விருக்ஷம் ஆருக்கும் உதவாது.
    Even the katpaka tree in the garden of Durga is of no use to mankind.
    The katpaka tree is said to yield whatever a suppliant may require.