Page:Tamil proverbs.pdf/255

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
237
  1. காளிப்பட்டம் போனாலும் மூளிப்பட்டம் போகாது.
    The name Kali may become obsolete, but not the (nicknane) Mooli, the earless.

  2. காற் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது.
    A cat worth a quarter of a cash consumed curds worth three quarters of a cash.

  3. காற்றில் அகப்பட்ட கப்பல்போல் அலைகின்றது மனம்.
    The mind is agitated like a ship in a storm.

  4. காற்றுக்கா மழைக்கா போர்த்துக்கொள்ள துணிக்கா?
    Is it as a security against the wind and rain that you are thus clad?

  5. காற்றுக்கு எதிரிலே துப்பினால் முகத்திலே விழும்.
    If one spit against the wind-the spittle-will strike his own face:

  6. காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது.
    A dhony can not sail against the wind.

  7. காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
    Will the wind blow so as to avoid certain persons?

  8. காற்று உள்ளபோது தூற்றிக்கொள் கரும்பு உள்ளபோது ஆட்டிக் கொள்.
    Winnow when the wind blows, work the sugar-mill when the cane is ripe.

  9. காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா?
    Can one seize the wind and confine it in a small vessel?

  10. காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு.
    Anchor a ship with reference to the wind.

  11. கானலை நீரென்று எண்ணி மான் ஓடி இளைத்ததுபோல.
    Like the deer that wearied itself in pursuit of a mirage imagining it to be water.