Page:Tamil proverbs.pdf/257

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
239
  1. கிணற்றுத் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது ஆர், குடியாததைக் கண்டது ஆர்?
    Who knows whether the frog in the well did or did not drink water?

  2. கிணற்றுத் தவளைக்கு ஏன் நாட்டு வளப்பம்?
    What has the frog in the well to do with the news of the country?

  3. கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
    Having escaped falling into the well he jumped into the fire.

  4. கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா?
    Will the sea shrink at the sight of a well?

  5. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகுமா?
    Will the flood carry away the water of the well?

  6. கிணற்றிலேத் தண்ணீர் உதித்தது.
    Water sprang up in the well.

  7. கிணற்று ஆழமும் கயிற்று நீளமும் பார்க்கவேண்டும்.
    The depth of the well and the length of the cord must be ascertained.

  8. கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?
    Will he who has fallen into a well once fall in again?

  9. கிணற்றில் கல் போட்டதுபோல.
    Like dropping a stone into a well.

  10. கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பை மயிரே புறப்படும்.
    The more you dig in the refuse heap of the barber, the more will hair turn up.

  11. கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.
    The more you dig, the more will greens and hair appear.

  12. கிரக சாந்திக்குச் சவரம்பண்ணிக் கொள்ளுகிறதா?
    Will shaving counteract the evil influence of a planet?