Page:Tamil proverbs.pdf/258

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
240
பழமொழி.
  1. கிரியை அற்றோன் மறை சாற்றுவது ஏன்?
    What! is it for an evil-doer to teach religious precepts?

  2. கிருபா நதியே ச்ருவா நிதி.
    The stream of grace is the source of all treasures.

  3. கிழக் குடலுக்குச் சோறும் இடிச் சுவருக்கு மண்ணும் இடு.
    Give rice to the aged and add mud to a ruinous wall.

  4. கிழப் பேச்சு சபைக்கு ஏறுமா?
    Will the words of an old man go up to the assembly?

  5. கிழவன் ஆனாலும் கெட்டை ஆனாலும் கட்டிக் கொண்டவள் பிழைப்பாள்.
    She who marries will do well whether her husband be old or poor.

  6. கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம்.
    It is better to fall into a well than to marry an old man.

  7. கிழவி பேச்சைக் கின்னரக்காரன் கேட்பானோ?
    Will a musician listen to the speech of an old woman?

  8. கிழவியும் காதம் குதிரையும் காதம்.
    The old woman is a katham from the horse, and the horse a katham from the old woman.

  9. கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேற மாட்டாது.
    Neither the house of an old woman, nor the grove in which there are parrots, will be saved from ruin.

  10. கிழிந்த சீலை காசுக்கு இரண்டு.
    Two rags for a cash.

  11. கிழிந்த பம்பரம் காசுக்கு ரெண்டு.
    Two split tops for a cash.

  12. கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா?
    Is it proper to train a parrot and give it into the paw of a cat?