Page:Tamil proverbs.pdf/259

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
241
  1. கிளியைப்போல பேச்சும் மயிலைப்போல நடையும்.
    Speech like that of a parrot, gait like that of a peacock.

  2. கிள்ளப் பழுக்குமாம் கிளி இருந்து கொஞ்சமாம்.
    It is said that it ripens by being pinched, and that parrots will nibble it leisurely.

  3. கிள்ளுவார்கீழ் இருப்பதிலும் அள்ளுவார்கீழ் இருக்கலாம்.
    One may endure those who rob, but not those who pilfer.

கீ.

  1. கீரி கடித்த பாம்புபோலே.
    Like a snake bit by a mungoose.

  2. கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.
    Inveterate enmity exists between the mungoose and snakes.

  3. கீரியும் பாம்பும்போல.
    Like a mungoose and a snake.

  4. கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.
    An opposition shop is good even among green grocers.

  5. கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே.
    As if a parasite should spring from the lower part of a vegetable.

  6. கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா?
    When I order the greens to be pruned, is a garland put up?

  7. கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?
    Why sing eléla when plucking up greens?

  8. கீரையை இரண்டு கறி பண்ணாதே.
    Do not make two curries of a vegetable.

  9. கீர்த்தியால் பசி தீருமா?
    Will hunger be appeased by fame?