Page:Tamil proverbs.pdf/260

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
242
பழமொழி.
  1. கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன?
    Whence sorrow to him who hag obtained praise?

  2. கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கிறான்.
    If it is said that a snake is below, he looks up.

  3. கீழ்குலத்தான் ஆனாலும் கற்றவன் மேல்குலத்தான்.
    Though of low origin, the learned ranks with the highest class.

  4. கீழ்க்காது மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி.
    Her ears are rent at both ends; in an affray she is equal to Durga.

  5. கீறி ஆற்றினால் புண் ஆறும்.
    If lanced, the sore will heal.

கு.

  1. குங்கிலியத் தூபம் காட்டிச் சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?
    If indeed the incense has expelled the demon, where is the sign?-uplifted hands.

  2. குங்குமம் சுமந்த கழுதை பரிமளம் அறியுமா?
    Can the ass which carried the kungumam-a fragrant resin-appreciate scents?

  3. குங்குமக் கோதைக்கு அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
    The donation to the perfumed dame being five fanams, is five fanams to be assigned to the blind woman also?

  4. குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற்போல.
    As if one lost his natural smile by taking medicine to induee a simpering expression.

  5. குடத்தில் ஏற்றிய விளக்கு.
    A lamp lit in an earthen pot.