Page:Tamil proverbs.pdf/261

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
243
  1. குடத்திற் பொன் கூத்து ஆடுமா?
    Will gold in a pot dance?

  2. குடப்பால் கறந்தாலும் குதிரை ஓட்டம் ஓடமாட்டாது.
    Though the cow gives a large pot of milk, it is not equal to the horse in speed.

  3. குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.
    Though it may yield a large pot of milk, a cow that destroys the roof is not desirable.

  4. குடம் தண்ணீரிற் கொள்ளி வைத்தாற்போல.
    As if a firebrand were put into a pot of water.

  5. குடலும் கூந்தலும் கொண்டது கொள்கை.
    Habit is the rule of the stomach and the hair.

  6. குடல் கூழுக்கு அழுகிறதாம் கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.
    It is said that the stomach cries for gruel, and the tresses for flowers.

  7. குடல் அறுந்த நரி எந்தமட்டும் ஓடும்?
    How far can a jackal run after its bowels are dislodged?

  8. குடல் அறுந்த கோழி எங்கே போகும்?
    Whither will a fowl go after its entrails have been exposed?

  9. குடி இருந்து அறி வழி நடந்து அறி.
    Learn the character of a person by dwelling with him, and the condition of a road by walking in it.

  10. குடி இருந்து பார் கூட்டுப்பயிர் இட்டுப் பார்.
    Test his social qualities by living with him, and his honesty by joint tillage.

  11. குடி இருப்பது குச்சுவீடு, கனாக் கண்டது மச்சுமாளிகை.
    He who dwells in a humble cottage dreams of ceiled apartments.