Page:Tamil proverbs.pdf/262

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
244
பழமொழி.
  1. குடி இல்லா வீட்டிற் குண்டுப்பெருச்சாளி உலாவும்.
    Bandycootes will run about in an uninhabited house.

  2. குடி இல்லா ஊரிலே அடி இட ஆகாது.
    It is a risk to set a foot in an uninhabited village.

  3. குடி இல்லா ஊருக்கு நரி இராசன்.
    A jackal is king in a deserted village.

  4. குடி உடையானே முடி உடையான்.
    He is fit for kingship who is approved by the people.

  5. குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.
    He has gruel to drink, and washes his mouth with rose water.

  6. குடிக்கிற பாலை வெடிப்பிலே வார்க்கிறதா?
    What, is it to pour down the drinkable milk into a crevice?

  7. குடிக்கிறது காடி நீர், அதற்குத் தங்கவட்டிலா?
    What you drink is sour gruel, do you require a cup of fine gold for it?

  8. குடிக்கிறது கூழாம் இருக்கிறது சிங்காசனமாம்.
    Living on gruel and sitting on a throne.

  9. குடிக்கிற வீடு விடியுமா?
    Will the family of a drunkard prosper?

  10. குடித்தனமோ துரைத்தனமோ எது பெரிது?
    Whether is greater, the government of a family or of a state?

  11. குடித்தனம் மேலிட வேண்டி பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டான்.
    Wishing to elevate his family he married a Pidari-village goddess.

  12. குடித்தனமென்று பண்ணினால் நன்மையும் வரும் தீமையும் வரும்.
    If one becomes a householder, he must expect both good and evil.