Page:Tamil proverbs.pdf/263

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
245
  1. குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்ததுபோல.
    As a lean dog watched a deserted house.

  2. குடிமதம் அடிபடத் தீரும்.
    The madness of a drunkard may be cured by beating.

  3. குடியனும் வெறியனும் சரி.
    A drunkard and a mad man are alike.

  4. குடியாத வீடு விடியாது.
    The family of a drunkard is always benighted.

  5. குடியிற் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.
    If the bowels of the house-wife burn, her cloth hanging on the lino will burn also.

  6. குடியில்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன்.
    He is the only wealthy man in a deserted village.

  7. குடியிற் பிறந்து குரங்கு ஆட்டம் ஆடுதல்.
    Born in a good family, and playing the monkey.

  8. குடியிற் பிறந்து செடியில் விழுந்தான்.
    Born in a good family and falling into a bush.

  9. குடி வைத்துக் கொண்டாயோ கொள்ளி வைத்துக் கொண்டாயோ?
    Have you taken a family to dwell with you? Or have you taken firebrands?

  10. குடி வைத்த வீட்டிற் கொள்ளி வைக்கலாமா?
    Is it proper to burn down a house after admitting a family?

  11. குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.
    As a wolf entered a fold of lambs.

  12. குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.
    He who breeds divisions in a family shall be cuffed to death.