Page:Tamil proverbs.pdf/274

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
256
பழமொழி.
  1. குருவிக்குத் தக்க ராமேசுரம்.
    Raméswaram suited to the bird.
    This is I think a perversion of the foregoing proverb. An aged or feeble person may say, my Raméswaram, pilgrimage, efforts, must be moderate.

  2. குருவிக்குத் தக்க பாரம்.
    A burden suited to the bird.

  3. குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.
    Never disturb the nest of a bird with a stick.

  4. குருவுக்கு மிஞ்சின சீஷனா?
    Is there a disciple who is above his Guru?

  5. குருவுக்கு நாமம் குழைத்துப் போடுவான்.
    He will deceive his own Guru.

  6. குருவுக்குத் துரோகம் செய்தாலும் குடலுக்குத் துரோகம் செய்யக்கூடாது.
    Though a Guru may be deceived, the stomach cannot.

  7. குரு வேஷம் கொண்டவன் எல்லாம் குரு ஆவானா?
    Are all religious teachers who have assumed the garb?

  8. குலத்தைக் கெடுத்த கோடாலிக்காம்பு.
    The handle of an axe that destroyed its own species.
    The tree from which its handle was taken, was felled by the axe.

  9. குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.
    It is said that a monkey will destroy its own species.

  10. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்.
    It becomes a lawful wife to honour her husband.

  11. குலமகன் குலத்துக்கு அழுவான், மூக்கறையன் மூக்குக்கு அழுவான்.
    The high-born mourns the loss of caste, and the man who has lost his nose, his nose.