Page:Tamil proverbs.pdf/282

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
264
பழமொழி.
  1. கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான்.
    He frequents his concubine's house as a dog wandering about.

  2. கூத்துப் பார்க்கப் போன இடத்தில் பேய் பிடித்ததுபோல.
    As one was seized by a demon when he went to see a comedy.

  3. கூரிய சொல்லான் ஆரிலும் வல்லன்.
    He whose words are keen, is of all the most powerful.

  4. கூருக்கு எதிர் உதைத்தல் சூரெழ வருத்தும்.
    Kicking against thorns will cause pain.

  5. கூரை ஏறிக் கோழி பிடிக்கமாட்டாத குருக்கள் வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா?
    If a guru is not able to go to the house-top to catch a fowl, how can he rend the heavens and show vikundam to his disciple?

  6. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் வரும்.
    If rice is thrown on the roof, a thousand crows will come.

  7. கூர்மையாளனே நேர்மையாளன்.
    The acute man is the upright man.

  8. கூலி குறைத்தால் வேலை கெடும்.
    If the hire be diminished, the work will be spoiled.

  9. கூலி குறைத்தாயே குறை மரக்கால் இட்டாயே.
    Thou hast reduced my wages, and used false measures when paying me.

  10. கூலிக்காரன் பெண்டாட்டி பிள்ளை பெறப்போகிறாளாம் குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதாம்.
    It is said that the wife of a labourer is about to be confined, and that a castor plant will spring upon the midden.

  11. கூலிக்கு நாற்று நட வந்தவனுக்கு எல்லைக்கு வழக்கோ?
    Does he who came on hire to transplant grain institute a boundary suit?