Page:Tamil proverbs.pdf/283

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
265
  1. கூலிக்குப் பாவி குறுக்கே வந்தானே.
    A vicious fellow prevented the payment of my wages.

  2. கூலிக்குக் கழு ஏறுவார்களா?
    Will they hire themselves to be impaled?

  3. கூலிப் படை வெட்டுமா?
    Will mere hirelings conquer?

  4. கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக்கொண்டவன் பிழைப்பான்.
    Whether gruel or refuse, he who has drunk it will live.

  5. கூழுக்கு மாங்காய் தோற்குமா?
    Will an unripe mango fail before gruel?

  6. கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம் குரங்குக்குக் தேங்காய் கொண்டாட்டம்.
    An unripe mango improves the gruel, the kernel of a coconut is a feast to a monkey.

  7. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
    He wishes to drink the gruel, and he also wants a nice mustache.
    Spoken of things incompatible.

  8. கூழுக்குக் கொறடா மிளகாய்.
    A chilly serves as a whip to gruel.
    It makes it pungent.

  9. கூழ் என்றாலும் வாழ்வுக்குத் தக்கதாக குடிக்கத்தான் வேண்டும்.
    Though only gruel, it must be drunk agreeably to one's circumstances.

  10. கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்.
    If only gruel, he who drinks it will live.

  11. கூழ் குடிக்கிலும் கூட்டு ஆகாது.
    Fellowship is undesirable even in drinking gruel.