Page:Tamil proverbs.pdf/285

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
267
  1. கெடுப்பதும் வாயால் படிப்பதும் வாயால்.
    It is with the mouth we injure others; it is with the mouth we read.

  2. கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
    One is blind to his own imprudence.

  3. கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.
    Make a pitfall for imprudence.

  4. கெடுவாய் கேடு நினையாதே.
    Thou wilt be ruined, think not of destroying another.

  5. கெடுவான் கேடு நினைப்பான்.
    He who is on the way to ruin, will mediate another's ruin.

  6. கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்றை எடுத்து விழுங்கினது போல.
    As a crane in an evil time seized and swallowed a keliru fish.

  7. கெட்ட நாய்க்குப் பட்டது பிரீதி.
    The wretched dog feels satisfied with the beating he received.

  8. கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.
    A village doomed to ruin profits not by repeated precaution.

  9. கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணமா?
    Is a premium of half a fanam demanded of one who is reduced in circumstances?

  10. கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
    Will curdled milk become sweet again?

  11. கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.
    I have had enough of loss, sufferings and toil in watering the vegetable garden.

  12. கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை.
    A vicious child in a poor family.