Page:Tamil proverbs.pdf/286

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
268
பழமொழி.
  1. கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது.
    A child is born under the star kèttai in a poor family.

  2. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.
    A vicious donkey has mischievous propensities.

  3. கெட்டவன் குடி கெட்டது வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கவே வாங்கு.
    The family is ruined, do not fail to get the interest without reduction.

  4. கெட்டவன் குடி கெடட்டும் நீ குடி மிளகுசாற்றை.
    No matter whose family is ruined, you drink the pepper water.

  5. கெட்ட குடியே கெடும் பட்ட காலிலே படும்.
    The decaying family will be ruined. It will hit the leg which is already struck.

  6. கெட்ட மாடு தேடுமுன்னம் எட்டு மாடு தேடலாம்.
    You may procure eight cows before you can recover one that has strayed.

  7. கெட்ட மார்க்கத்திலே இருக்கிற ஒருவன் மற்றவர்களையும் அதில் இழுக்கப் பிரயாசப்படுவான்.
    He who pursues a vicious course will try to lead others into the same.

  8. கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.
    The impoverished have no friends even among their own kindred.

  9. கெட்டார் வாழ்ந்தால் கிளைகிளையாய்த் தளிர்ப்பார் வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகார்.
    When the ruined in circumstances flourish they cast out innumerable branches; when the prosperous are reduced to poverty they are not worth a potsherd.

  10. கெட்டான் பயல் பொட்டலிலே, விழுந்தான் பயல் சறுக்கலிலே.
    The boy suffered by walking in the arid tract, he fell in the slippery ground.