Page:Tamil proverbs.pdf/287

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
269
  1. கெட்டாலும் செட்டி செட்டியே கிழிந்தாலும் பட்டு பட்டே.
    Though reduced in circumstances a chetty is a chetty; silk is silk though never so torn.

  2. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள் தெரியும்.
    The deception of the clever will be manifest in eight days.

  3. கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை மட்டித்தனனுக்கு நயம் இல்லை.
    The clever fear nothing; the fool gains nothing.

  4. கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும்.
    The reputation of the adroit lasts only eight days.

  5. கெட்டும் பட்டணம் சேர்.
    Though you are ruined, cling to the city.

  6. கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?
    When the time of destruction comes, will not evil devices operate?

  7. கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துபோகிற பசுவைத் தானம் பண்ணினதுபோல.
    Like giving a dying cow to a poor Brahman.

  8. கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?
    Can a family survive repeated misfortunes?

  9. கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.
    Baiting with a small fish and catching a large one.

  10. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை என்பான்.
    If the fencer fall, he will pretend he did so according to the rules of his art.

  11. கெலியன் பாற் சோறு கண்டதுபோல.
    As the greedy saw milk and rice.