Page:Tamil proverbs.pdf/288

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
270
பழமொழி.

கே.

  1. கேடது இல்லான் பாடது இல்லான்.
    One free from loss, free from suffering.

  2. கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.
    A bad time is followed by an alms-dish.

  3. கேடு கெட்ட நாயே வீடு விட்டுப் போவேன்.
    You worthless dog quit my house.

  4. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே, ஆனைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
    Indigence follows indiscretion, the elephent makes its appearance after the sound of its bells reaches the ear.

  5. கேட்டது எல்லாம் நம்பாதே நம்பினது தெல்லாம் சொல்லாதே.
    Believe not all you hear, tell not all you believe.

  6. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
    Fortitude under privations will tend to restore lost fortune.

  7. கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.
    Be not deceived by hearsay reports.

  8. கேண்மைத் தானவா வாய்மைக் கானவா.
    Thou the self-existent, thou art the powerful.

  9. கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
    Friends and relations are denied to the ruined.

  10. கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.
    He who acted on hearsay destroyed the village.

  11. கேள்வி உடமை கீர்த்தியே கல்வி.
    Instruction is wealth, and learning is fame.