TAMIL PROVERBS.
289
-
- சதை இல்லாமற் கத்தி நாடுமா?
- Will the knife operate where there is no flesh?
-
- சதை உள்ள இடத்திலே கத்தி நாடும்.
- The surgeon’s knife seeks the fleshy parts.
-
- சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.
- As if seven clouds simultaneously rained fire.
-
- சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பணையா?
- Is the order of the Naidu required in order to procure gruel at the choultry?
-
- சத்திரத்துப் பாட்டுக்குத் திருப்பாட்டு மேலா?
- Is a divine hymn superior to that sung in a choultry?
-
- சத்திரத்திலே போசனம், மடத்திலே நித்திரை
- Eating in a choultry and sleeping in a monastery.
-
- சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது.
- To say God is the witness of what one testifies, is the highest of all forms of oath.
-
- சத்தியத்திற்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டப்போது அழப்போகிறதா?
- Will the child that has no regard for truth go to weep with one when in sorrow?
-
- சத்தியம் நன்னிலை, சாவைத் தினம் நினை.
- Truthfulness is the best condition, daily think of death.
-
- சத்தியமே வெல்லும் அசத்தியமே கொல்லும்.
- Truth prevails, falsehood kills.
-
- சத்தியமே கொல்லும் சத்தியமே வெல்லும்.
- Truth kills falsehood, truth prevails.
-
- சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.
- The truthful man has all other virtues.