Page:Tamil proverbs.pdf/308

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
290
பழமொழி.
  1. சத்திரத்துச் சாப்பாட்டுக்குத் தலத்து ஐய்யங்கார் அப்பணையோ?
    To eat rice at the choultry, is the permission of the head brahman necessary?

  2. சந்துகள் ஓடு சந்துக்கள் சேர்வார், சந்தனத்தோடு கருப்பூரம் சேரும்.
    The powerful associate with the powerful, sandal paste mixes with camphor.

  3. சந்துருக்களையும் சித்தமாய் நேசி.
    Love even your enemies heartily.

  4. சந்துரு பொறாமை தனக்கே தண்டனை.
    An enemy’s envy is his own punishment.

  5. சந்திரனைப் பார்த்து நாய் குலைத்தாற்போல.
    As a dog barked at the moon.

  6. சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்
    The moon shines even in the house of the outcast.

  7. சந்தையில் அடிபட்டவனுக்குச் சாட்சி ஆர்?
    Who is the witness of him that has been flogged in the bazaar?

  8. சந்தைக் கூட்டம் பொம்மல் ஆட்டம்.
    A crowd of people in a market-place is like a puppet-show.

  9. சந்தைக்கு வந்தவர்கள் துணை ஆவாரா?
    Will those who frequent the same market aid as friends?

  10. சன்னியாசி வீடு திண்ணையிலே.
    The pial-open verandah-is the home of the ascetic.

  11. சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.
    The pilgrimage of the mendicant is to jump off a pial.

  12. சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது.
    The old temper of the ascetic will not leave him.