Page:Tamil proverbs.pdf/338

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
320
பழமொழி.
  1. செயமுள்ள மட்டும் பயம் இல்லை.
    While successful he knows no fear.

  2. செய்த வினை செய்தவர்க்கு எய்திடும்.
    Every man’s actions will cleave to him.

  3. செய்தார்க்குச் செய்வது செத்தபிறகோ?
    Is it after death that benefits are to be requited?

  4. செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கில் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை.
    When all occupations are duly weighed, that of weaving will appear unequalled.

  5. செய்வினை திருந்தச் செய்.
    Do well, what you have to do.

  6. செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற்போல.
    Like giving a horse in compensation, to one who has been slippered.

  7. செருப்புக்கு அச்சாரம் துரும்பு.
    The earnest paid for shoes is a straw.

  8. செருப்பின் அருமை வெயிலில் தெரியும் நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
    The value of shoes is appreciated when the sun is hot, the value of fire is known when the weather is cold.

  9. செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? .
    Is the foot to be cut off to try on the shoe?

  10. செருப்புக் கொள்ளுகிறது காலுக்கோ தலைக்கோ?
    Is it for the feet or head, that one buys shoes?

  11. செலவிற் குறைந்த வரவானால் சேமப்படுகிறது எப்படி?
    If expenses exceed income how can one thrive?

  12. செலவு அதிகம் வரவு போதாது.
    Expenses exceed the income.