Page:Tamil proverbs.pdf/363

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
345
  1. தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறதுபோல.
    Like applying to the village officer for permission to punish his own child.

  2. தன் வாயாலே தான் கெட்டான்.
    His own mouth ruined him.

  3. தன் வாயாலே தான் கெட்டதாம் ஆமை.
    It is said that the tortoise perished by its own mouth.

  4. தன் வாய்ச் சீதேவி முன்வாயிலே.
    The presence of the goddess of prosperity, will be evinced in the speech.

  5. தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
    His own actions will burn him, a false cake will burn the house.

  6. தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற்போல.
    As if one took down his door, and placed it in the house of his neighbour.

  7. தன் வீட்டு விளக்கென்று முத்தம் இட்டாற் சுடாதா?
    If one kiss his lamp because it belongs to his own house, will it therefore not burn him?

  8. தன் வீடு தவிர அயல் வீட்டுக்கு மேட்டுவரி என்கிறான்.
    He asserts that all houses are taxed but his own.

  9. தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்து விட்டு விடிகிற மட்டும் நாய் ஓட்டினதுபோல.
    Like driving away dogs till break of day, because he had lent his door to a neighbour.

  10. தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்?
    If a disciple is intent on his own ruin, what can his master do?