Page:Tamil proverbs.pdf/365

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
347

தா.

  1. தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.
    He mounts on the head by reason of continued indulgence.

  2. தாசரி தப்பு தண்டவாளத்துக்குச் சரி.
    The tabret of the Vaishnava mendicant is like cast-iron.

  3. தாடிக்குப் பூச் சூடலாமா?
    Can you wear a garland round your beard?

  4. தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்டதுபோல.
    As one asked for fire to light his cigar when his beard was on fire.

  5. தாட்சிணியம் தனநாசம்.
    Kindness leads to loss of wealth.

  6. தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
    The deceitful feasts on rice and curds, while the faithful feeds on warm rice and water.

  7. தாட்டோட்டக்காரரைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்.
    It is better to be alone than to associate with the fraudulent.

  8. தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் கூட்டாட்டக்காரனுக்குக் கூழும் தண்ணீரும்.
    The fraudulent enjoys curds and rice, while the honest man gets only gruel and water.

  9. தாதனும் பறையனும்போல.
    Like a Vaishnava mendicant and a pariah.

  10. தாதன் கரத்தில் அகப்பட்ட குரங்கைப்போல் அலைகிறான்.
    He moves about like a monkey in the hands of a juggler.