Page:Tamil proverbs.pdf/366

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
348
பழமொழி.
  1. தாது அறியாதான் பேதை வைத்தியன்.
    He who does not know how to feel one’s pulse is an empiric.

  2. தாதும் இல்லை பிராதும் இல்லை.
    No cause, no complaint.

  3. தாபரம் இல்லா இளங்கொடிபோல.
    As a tender creeper without a prop.

  4. தாமதம் தாழ்வுக்கு ஏது.
    Delay will lead to ruin.

  5. தாமரை இலைத் தண்ணீர்போல் ததும்புகிறான்.
    He trembles like a drop of water on a lotus leaf.

  6. தாம்பு அறுதல் தோண்டியும் பொத்தல்.
    The cord is rotten and the water pot is fractured.

  7. தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.
    A herb that welcomed a child cast off by its parents.

  8. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.
    Though they are mother and child their mouths and bellies are diverse.

  9. தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே வாதி.
    The prosecutor of a matricide is in his own village.

  10. தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவு ஆட வேண்டும்.
    Though related on the side of one’s mother he must be treated as a relation after thoroughly ascertaining his connections.

  11. தாயைப்பார்த்துப் பெண்ணைக் கொள்ளு பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு.
    Before taking a woman in marriage ascertain the character of her mother, before buying a cow ascertain the quantity of its milk.