Page:Tamil proverbs.pdf/368

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
350
பழமொழி.
  1. தாய்க்குப்பின் தாரம்.
    Next to one’s mother, is his wife.

  2. தாய்க்கு ஒளித்த சூலும் உண்டோ?
    Can the conception of an unmarried daughter be concealed from her mother?

  3. தாய்க்கு விளைந்தாலும் தனக்கும் விளையவேண்டும்.
    It is not enough for one’s mother’s field to bear a crop, one’s own field must also be fruitful.

  4. தாய்க்குச் சோறு இடுகிறது ஊருக்குப் புகழ்ச்சியா?
    Does one acquire fame in a country because he feeds his mother?

  5. தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்குகிறான்.
    He carries a torch at his father’s second marriage where the bride is younger than himself.

  6. தாய் செத்தால் மணம் மகள் செத்தால் பிணம்.
    If the mother die, a marriage, if the daughter die, a corpse.
    The wife is here called mother with reference to her children. In the event of her death the husband may marry again.

  7. தாய் செத்தால், மகள் திக்கற்றாள்.
    The mother is dead, the daughter is destitute.

  8. தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.
    When one rejects the advice of his mother, no precept can reform him.

  9. தாய் தவிட்டுக்கு அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.
    While the mother is crying for bran, the child is crying for ginger chutny.

  10. தாய்தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்?
    Who will approve of a daughter that is undutiful to her own mother?