Page:Tamil proverbs.pdf/369

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
351
  1. தாய் தூற்றினால் ஊர் தூற்றும், கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.
    If a mother should spread evil reports, the village also will do so; if a husband should defame his wife, a stranger will.

  2. தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.
    The child that has not seen the face of its mother, and the growing crop that has not seen rain, will not do well.

  3. தாய் முலைப்பாலுக்குப் பால்மாறினதுபோல.
    As one complained that his mother’s milk was insipid.

  4. தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயிற் சீலை.
    A child disobedient to her mother, is like a cloth in the mouth of a dog.

  5. தாரமும் குருவும் தலையில் விதி.
    A wife and a Guru are preordained.

  6. தாராப் பெட்டைபோல.
    Like a duck.

  7. தாராளந்தான் நெய், தண்ணீர் பந்தலில், நீர்ச்சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.
    Ghee is plentiful in his feasts, while cold rice water in the charity pandal is as scarce as ghee.

  8. தாலி அறுத்தவளுக்கு மருத்துவிச்சி தயவு ஏன்?
    Of what use is the favour of a midwife to a widow?

  9. தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்? தாரம் தப்பினவனுக்குப் பொங்கியிட.
    Why does the widow survive her husband? that she may cook rice for a widower.

  10. தாவத் தஞ்சம் இல்லா இளங்கொடிபோல் தவிக்கிறான்.
    He languishes like a tender creeper without a prop.