Page:Tamil proverbs.pdf/370

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
352
பழமொழி.
  1. தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்
    Pot-bellied and needle-throated.

  2. தாழ் குலத்திற் பிறந்தாலும் புத்தியினால் அலரிப்பூவைப்போல் பிரயோசனப்படுவர்.
    Though low-born, they may by their good sense prove useful as an oleander flower.

  3. தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
    If humble thou shalt prosper.

  4. தாழ்ந்தது தங்கம் உயர்ந்தது பித்தளை.
    Gold has become low in estimation, and brass high.

  5. தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.
    The humble and obedient shall rise to eminence.

  6. தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.
    An unsubmissive youth is useless.

  7. தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.
    In adversity, manly bearing; in prosperity, humility.

  8. தானத்தனத்தான் சகல சம்பத்தன்.
    He is the wealthiest in the place, and possesses all in abundance.

  9. தானமது விரும்பு.
    Desire to be charitable.

  10. தானாகவந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
    When the goddess of prosperity unsought visits you, is it right to kick her out?

  11. தானும் உண்ணான் பிறருக்கும் கொடான்.
    He will neither eat himself, nor give to others.

  12. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால் கனியுமோ?
    Can you mature a fruit by beating it with a stick when it does not ripen of itself?