Page:Tamil proverbs.pdf/372

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
354
பழமொழி.
  1. தான் சாக மருந்து உண்பார் இல்லை.
    No one takes medicine with a view to death.

  2. நான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிர்ந்து என்ன?
    When one is dead, what matters it whether the world be overturned or not?

  3. தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.
    His tripping is as a staff to others.

  4. தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.
    Being herself a thief, she trusts not her neighbours.

  5. தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.
    He who takes poison will destroy himself.

  6. தான் தின்னத் தவிடு இல்லை வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?
    He has no bran to eat, why seek a young pig to rear for hire?

  7. தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான்.
    In eating he has a monopoly.

  8. தான் தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
    A gluttonous mother will not feed her child, nor will one who feeds on bran keep fowls.

  9. தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.
    Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.

  10. தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.
    Gold not acquired by one's own exertions, has neither standard nor touch.

  11. தான் பத்தினி ஆனால் தேவடியாள் தெருவிலும் குடி இருக்கலாம்.
    If a woman be chaste she may live in the street of the harlots.