Page:Tamil proverbs.pdf/375

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
357
  1. திரித்தவரையிற் கயிறு திரிக்காதவரையிற் பழுதை.
    As far as twisted it is a rope, that not twisted is mere fibre.

  2. திரி மூர்த்திகளும் தேவரும் காணார்.
    Neither the triad nor the thirty-three crores of supernals, are comparable to him.

  3. திரு உண்டானால் திறமை உண்டாகும்
    When there is wealth, there is power.

  4. திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.
    A screw is strong, old cow-dung breeds worms.

  5. திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கும் காணலாயிற்றே.
    Even those who have seen the holy one are not exempt from evil.

  6. திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை.
    Those that have seen the holy one experience no evil.

  7. திருக்காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா?
    Does a marriage pandal require shading?

  8. திருடனைத் தேள் கொட்டினதுபோல.
    As a scorpion stung the thief.

  9. திருடன் பெண்சாதி என்றைக்கும் கைம்பெண்சாதி.
    The wife of the thief is always a widow.

  10. திருடனுக்குத் தெய்வமே சாட்சி.
    The Deity is witness against the thief.

  11. திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும் விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
    A rogue is fed with thick milk and rice, while the honest get nothing but warm water and rice.

  12. திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல.
    Like tying a string of bells round the neck of a thievish dog.