TAMIL PROVERBS.
363
-
- துஞ்சி நின்றான் மிஞ்சி உண்ணான்.
- He that is addicted to sleep loses his appetite.
-
- துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
- Unsympathizing wives are like fire in the bosom.
-
- துடுப்பு இருக்க கை வேவானேன்?.
- Why should the hand be burnt when there is a ladle?
-
- துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.
- Like tying a silk tassel to a broomstick.
-
- துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம்.
- To the wicked, punishment, to the good, protection.
-
- துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்
- The people of the village will reprove a wicked child.
-
- துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும் துலுக்கக்குட்டி மாத்திரம் ஆகாது.
- Though girls may be had at a pie a head, a Muhammadan girl is undesirable.
-
- துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.
- An impudent woman has no shame, a weeping woman has no sorrow.
-
- துணிந்தார்க்குத் துக்கம் உண்டா? பணிந்தார்க்குப் பாடு உண்டா?
- Do the adventurous experience grief, or the humble, distress?
-
- துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை, அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
- The adventurous know not sorrow, the sorrowful know not anger.
-
- துணைபோனாலும் பிணைபோகாதே.
- Though you may bear one company, do not become his security.