Page:Tamil proverbs.pdf/388

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
370
பழமொழி.
  1. தெரியாத் திணையே பிரியாத் துணை நீ.
    O unconscicous earth, thou art my inseparable help.

  2. தெருளா மனதுக்கு இருளே இல்லை.
    An unenlightened mind has no sense of darkeness.

  3. தெவிட்டாக் கனி பிள்ளை, தெவிட்டாப் பானம் தண்ணீர்.
    A child is a fruit that does not nauseate, and water is a beverage that never cloys.

  4. தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர் சேற்றைக் கலக்கி விட்டீர்.
    Having drunk the clear water, thou hast stirred the mud.

  5. தெளிவுறும் பரதேவ தேசிகன்.
    The illustrious, holy, divine teacher.

  6. தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி.
    In thieving he is a precious stone—one of the nine gems.

  7. தெறிக்க அடித்த தட்டானைப்போல.
    Like the goldsmith who beats off the gold in pieces.

  8. தெற்கத்தைக் குருவியை வடக்கத்தைக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்னப் போக.
    A northern bird induced a southern bird to feed on Sígampalam-a fruit.

  9. தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?
    Will not the south wind blow again?

  10. தென் காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.
    The manners of Tenkási, and the ceremoniousness of Tinnevelly.

  11. தென்றல் முற்றிப் பெரும் காற்று ஆச்சுது.
    The gentle southern breeze has increased to a gale.

  12. தென்னமரத்திற் பாதி என்னை வளர்த்தாள் பாவி.
    I am half the height of a cocoanut tree, she who brought me up is a sinner.