Page:Tamil proverbs.pdf/390

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
372
பழமொழி.
  1. தேம்படு பனையின் திரள் பழத்தொரு விரை.
    A selected nut from a number of sweet palmirah fruit.

  2. தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.
    Though worn by attrition, the sandal wood loses not its fragrance.

  3. தேய்ந்து மூஞ்சுறு ஆனீரோ கொம்புகள் உதிர்த்தீரோ?
    Art thou worn out and become a musk-rat, hast thou cast thy horns?

  4. தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.
    A thoughtless act occasions endless trouble.

  5. தேரைமோர்ந்த தேங்காய்போல.
    Like the cocoanut smelt by a toad-a blighted cocoanut.

  6. தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்.
    He wanders along the street with the temple car.

  7. தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.
    He is called intelligent because of his nice discrimination.

  8. தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா?
    Is robbery committed in a street of harlots?

  9. தேவடியாள் சிங்காரிக்குமுன்னே தேர் ஓடித் தெருவில் நின்றது.
    Before the dancing girl had adorned herself, the car moved and came to a stand on the road.

  10. தேவடியாள் மகன் திவசம் செய்ததுபோல.
    As the son of a harlot commemorated the death of his father.

  11. தேவடியாள் செத்தால் பிணம், தேவடியாள் தாய் செத்தால் மணம்.
    When a halot dies the body is a mere corpse, when her mother dies funeral rites are observed.