Page:Tamil proverbs.pdf/392

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
374
பழமொழி.
  1. தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
    Flies swarm where there is honey.

  2. தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு, மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.
    A cuff for him who steals honey, a cuff for him who lives in the house of his father-in-law.

  3. தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.
    He speaks to him mellifluously, and accompanies him across the street in order to get rid of him.

  4. தேன் ஒழுகப் பேசுவான்.
    He speaks mellifluously.

  5. தேன் கூட்டிலே கல்லைவிட்டு எறியலாமா?
    May you throw stones at a bee-hive?

  6. தேன் தொட்டார் கை நக்காரோ?
    Will those who have touched honey not lick their fingers?

  7. தேன் தொட்டவன் புறங்கை நக்காமற் போவானா?
    When one has touched honey, will he not lick the back of his hand?

  8. தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் தெங்கு ஆகுமோ?
    Will the gall-nut become as sweet as a cocoanut though watered with honey?

தை.

  1. தை ஈனாப் புல்லும் இல்லை, மாசி ஈனா மரமும் இல்லை.
    There is no grass that does not grow in January, nor tree that does not sprout in February.

  2. தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே?
    Whilst one gate is blocked up, and the other defended by artillery, O Uppanár how did you find your way in?