Page:Tamil proverbs.pdf/393

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
375
  1. தை பிறந்தால் வழி பிறக்கும்.
    If January come, roads come.

  2. தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல.
    Like holding the lath as each nail is fastened.

  3. தையலும் இல்லான் மையலும் இல்லான்.
    One who has neither wife, nor desire to marry.

  4. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
    In January and February sleep under thatch.
    Because dew is then excessive.

தொ.

  1. தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.
    When together friends, if separated enemies.

  2. தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.
    A child that can walk, is as Yama to a child in the cradle.

  3. தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.
    The demon of a wizard pursues one to the burning ground.

  4. தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவான்.
    She rocks the cradle and pinches the child.

  5. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
    Habits contracted in the cradle cleave to one till he goes to the burning ground.

  6. தொட்டுக் காட்டாத வித்தை சொட்டுப் போட்டாலும் வராது.
    Without a preceptor an art cannot be attained.

  7. தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன்.
    He is the friend of his servants who helps them.

  8. தொண்டெனப்படேல்.
    Be not called a slave.