Page:Tamil proverbs.pdf/407

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
389

நா.

  1. நா அசைய நாடு அசையும்.
    When the tongue moves, the whole country moves.
    The allusion is to a despotic ruler whose word is law.

  2. நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.
    The letter ந is the seat of God.

  3. நாக்குக்கு எலும்பு இல்லை எப்படிப் புரட்டினாலும் அப்படிப் புரளும்.
    The tongue having no bone will turn any way.

  4. நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.
    Promise-breakers make excuses.

  5. நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு கழுத்துக்கு கங்கணம் கட்டினது இல்லை.
    We too tied coloured cords about our arms, but not a halter on the neck.

  6. நாச்சியாரும் ஒன்றைப்பற்றி வார்க்கிறாள் நானும் ஒன்றைப்பற்றிக் குடிக்கிறேன்.
    The mistress pours it out with one design, and I drink if wiht another.

  7. நாச்சியாரைக் காணாத இடத்திலே முறுமுறுப்பதுபோல.
    Like murmuring in the absence of the mistress.

  8. நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.
    A master who bestows all desired blessings.

  9. நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் வேண்டுமோ?
    Is a sacred thread necessary for a brahman, who is known throughout the country?

  10. நாடு எங்கும் வாழ்ந்தால் கேடு ஒன்றும் இல்லை.
    If the whole country prospers, no evil will happen.