Page:Tamil proverbs.pdf/409

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
391
  1. நாணும்கால் கோணும் நடக்கும் கால் இடறும்.
    The foot of diffidence deviates, that of activity stumbles.

  2. நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல, வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.
    As a melody and a song are in harmony, so must instruction be in harmony with the Veda.

  3. நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.
    If we give to others, some one will give to us.

  4. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.
    When we think of one thing, the deity designs another.

  5. நாய் அறியுமா ஒருசந்திப் பானை?
    Does a dog know which are sacred vessels?

  6. நாயின் பீயை மிதிப்பான் ஏன், நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?
    Why tread on the dung of a dog, and waste good water to wash it off?

  7. நாயும் களிச்சட்டியும்போல.
    Like a dog with a chatty of thick gruel.

  8. நாயும் சரி நாவியும் சரி உனக்கு.
    A dog and a civet cat are both alike to you.

  9. நாயும் தன் நிலத்துக்கு ராஜா.
    Even a dog is king in his own place.

  10. நாயும் பூனையும்போல.
    Like dogs and cats.

  11. நாயும் வளர்த்து நரகலும் வாருவானேன்?
    Why keep a dog and clean up its filth?

  12. நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமோ?
    I am but a dog, will my word reach the assembly?