Page:Tamil proverbs.pdf/41

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
23
  1. அத்தனையும் நேர்ந்தாள், உப்பிட மறந்தாள்.
    Although she put in so many ingredients, she omitted salt.
    Said of something complete in all but one essential.

  2. அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.
    My brother-in-law’s death has not affected me any more than the loss of a hair; but his blanket and mattress have become mine.

  3. அத்திக்காயைப் பிட்டுப்பார்த்தால், அங்கும் இங்கும் பொள்ளல்.
    If you break open a fig, you will see cavities here and there.

  4. அத்தி பூத்ததுபோல் இருக்கிறது அவன் வந்தது.
    His coming is like the flowering of the fig-tree.
    Something that never happens.

  5. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான்
    The more a fig is opened, the greater will be the number of worms found.

  6. அத்திப்பூவை ஆர் அறிவார்கள்?
    Who ever saw the flower of a fig-tree?

  7. அத்திப்பூவைக் கண்டவர்கள் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர்கள் உண்டா?
    Are there any who have seen the blossom of the fig-tree? are there any who have seen the young of an owl?
    Said of things that rarely or never happen.

  8. அத்திமரத்தில் தொத்திய கனிபோல.
    Like fruit sticking to a fig-tree.

  9. அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்.
    He transgressed and became mad.

  10. அத்தைக்கு மீசைமுளைத்தாற், சிற்றப்பா என்கலாம்.
    Should the mustache of one’s aunt grow we may call her uncle.
    Referring to improbable contingencies.