Page:Tamil proverbs.pdf/42

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
24
பழமொழி.
  1. அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா?
    Will beauty emanate from one void of symmetry?

  2. அந்தணர்க்குத் துணை வேதம்.
    The Veda is the staff of the Brahman.

  3. அந்தணர் மனையிற் சந்தனம் மணக்கும்.
    The house of the Brahman is perfumed.
    It being a requisite for ceremonial usages.

  4. அந்தரத்தில் கோல் எறிந்து அந்தகன்போல.
    Like a blind man who has thrown his staff into the air.

  5. அந்தி ஈசல் பூத்தால், அடைமழை அதிகரிக்கும்.
    If white-ants take wing in the evening, it prognosticates excessive rain.

  6. அந்தி மழை அழுதாலும் விடாது.
    The evening rain will not cease even if one should weep.

  7. அந்தூது நெல்லானேன்.
    I am become as useless as a grain of paddy eaten by insects.

  8. அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறதுபோல.
    While the father is sucking the husk of the cocoanut his son is crying for the kernel or pulp.
    Indicating desires beyond one’s means.

  9. அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது.
    While the hawk snatches away the father’s waist-cloth his daughter is crying for a silk dress.
    Said in reproof when wishes are entertained beyond one’s means.

  10. அப்பத்தை எப்படிச் சுட்டீர்கள்? தித்திப்பை எப்படி நுழைந்தீர்கள்?
    How did you bake the cake? how did you sweeten it?