Page:Tamil proverbs.pdf/432

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
414
பழமொழி.
  1. பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.
    Like advising his partner to plant onions in order to effect his ruin.

  2. பங்காளி வீடு வேகிறது சுங்கான்கொண்டு தண்ணீர் விடு.
    The house of my partner is on fire, pour water with a pipe.

  3. பங்காளியும் பனங்காயும் பதம்பார்த்து வெட்டவேண்டும்.
    Observe the proper time for cutting a partner and palmyrah fruit.

  4. பங்குனி என்று பருப்பதும் இல்லை, சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.
    It wont grow larger because it is Panguni,-March-nor smaller because it is Chittarai-April.

  5. பங்குனிமாதம் பகல்வழி நடந்தவன் பெரும்பாவி.
    He that goes abroad in the day time in March, is a great sinner.

  6. பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.
    He who is not hungry cares not a hair about famine.

  7. பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டதுபோல.
    As two men, one belching through hunger, and the other by indigestion, were associated in joint tillage.

  8. பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.
    A cow with a long tail, an ox with a short one.

  9. பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.
    When hungry curry is not needed, nor a mat when sleepy.

  10. பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.
    Eat palmyrah fruit to satisfy hunger, no matter about the bile.
    Palmyrah fruit is believed to be very bilious.

  11. பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.
    Songs are pleasant after refection.