Page:Tamil proverbs.pdf/434

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
416
பழமொழி.
  1. பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?
    Because the cow is black, is her milk also black?

  2. பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?
    Are there any gentle cows, or poor brahmans?

  3. பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.
    To wear a cow skin, and spring like a tiger.

  4. பசுப்போலே இருந்து புலிப்போலே பாய்கிறாய்.
    Gentle as a cow, you spring as a tiger.

  5. பசு மரத்தில் தைத்த ஆணிபோல.
    Like a nail driven into a green tree.

  6. பசு விழுந்தது புலிக்குத் தாயம்.
    The falling of the cow, is a gain to the tiger.

  7. பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும். அதுபோல, நல்லவர்களுக்குச் செய்கிற உபகாரம் பலன் அளிக்கும்.
    When a cow is fed she yields sweet milk, so the favours shewn to the good will bring a reward.

  8. பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?
    If you slaughter a cow, will its calf live?

  9. பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்தது போல.
    Like killing the cow and giving shoes made of its hide.

  10. பசுவை அடித்துப் புலிக்குத் தானம் கொடுக்கிறதா?
    Do you kill a cow, and make an offering of it to a tiger?

  11. பசுவை விற்றாற் கன்றுக்கு வழக்கா?
    Having sold the cow, is there a dispute about the calf?

  12. பச்சடி கண்டால் ஒட்டடிமகளே.
    Daughter, if you find him rich, cling to him.