Page:Tamil proverbs.pdf/44

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
26
பழமொழி.
  1. அமரபட்சம் பூர்வபட்சம், கிஷ்ணபட்சம் சுக்கிலபட்சம்.
    The latter and former halves of the moon—its dark and bright sides.
    These symbolize the light and darkness, the gladness and sadness of human life.

  2. அமரிக்கை ஆயிரம் பெறும்.
    Quietness is worth thousands of gold.

  3. அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்.
    An oppressor and a clever man need no landed property.

  4. அமாவாசைக் கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி.
    In the darkness of the new moon the bandycoote finds a way wherever he goes.

  5. அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா?
    Is the food peculiar to the new moon to be had every day?

  6. அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களா?
    Will poison be received by the mouth accustomed to nectar?

  7. அம்பட்டகிருதம் வண்ணார ஒயிலும்.
    The arrogance of a barber and the affectation of a washerman.
    Said when inferiors give themselves airs of importance.

  8. அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராய்ப் புறப்படும்.
    If the rubbish heap of the barber be stirred, nothing but hair turns up.
    The more you examine an inferior thing, the viler will it appear.

  9. அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?
    Is hair a rare sight to the child of a barber?

  10. அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தால் என்ன, அடுத்த திருமாளிகையிற் கிடந்தால் என்ன?
    What matters it whether the helpless ass lies in an open place or in the adjoining palace.