Page:Tamil proverbs.pdf/440

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
422
பழமொழி.
  1. பணம் இல்லாதவன் பிணம்.
    He who has no money is a corpse.

  2. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
    If the word money be uttered, even a corpse will open its mouth.

  3. பணம் என்ன செய்யும் பத்து விதம் செய்யும்.
    What can money effect? it can do ten kinds of things.

  4. பணம் என்ன பாஷாணம், குணம் ஒன்றே போதும்.
    Why money? it is poison; a good disposition is enough.

  5. பணம் குலம் ஆகும், பசி கறி ஆகும்.
    Money, is rank; hunger, is curry.

  6. பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
    Money at the festive board, and rank on the dunghill.

  7. பணிகாரமோ சிலுசிலுப்போ?
    Is the sound that of baking cakes, or is it mere frizzle?

  8. பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான், லிங்கம் பால் சோத்துக்கு அழுகிறது.
    The religious mendicant is crying for a mouthfull of food, the linga, he worships, for rice and milk.

  9. பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெல்குத்திப் பொங்கல் இடுகிறாள்.
    Having put aside her former troubles on an old cadjan, she husked chamba rice and boiled it.

  10. பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்.
    The more he makes, the more varied the forms.

  11. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
    A man’s merit may be seen in the grain he grows.

  12. பதறாத காரியம் சிதறாது.
    A thing done without haste never fails.