Page:Tamil proverbs.pdf/441

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
423
  1. பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப்போகும்.
    A hasty proceeding will go to ruin.

  2. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்.
    May you bear sixteen children, and live very prosperously.

  3. பத்தி கொள்பவன் முத்தி உள்ளவன்.
    The devout attain heaven.

  4. பத்தியத்துக்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால், பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டுவருவான்.
    When requested to bring murunga fruit for diet, he brings coronilla grandiflora leaves for the milk-sprinkling ceremony.
    See note under proverb 4684.

  5. பத்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?
    Will an ungodly cat ascend to heaven?

  6. பத்தி இல்லாத புத்தி அசேதனம்.
    Reason without devotion is folly.

  7. பத்தி உண்டானால் முத்தி உண்டாம்.
    If there be piety, there will be final happiness.

  8. பத்தியோடே பாகற்காய் சட்டியோடே தீயுது.
    Pagal fruits in clusters are being charred in the chatty.

  9. பத்திலே விழுந்த பாம்பும் சாவாது.
    Even a snake that has fallen among ten, will not die.

  10. பத்திலே பசலை இருபதிலே இடும்பு.
    At ten childishness, at twenty arrogance.

  11. பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் பட்டதும்.
    By touching the virtuous woman, Dropati, Duriyodhana was ruined.

  12. பத்து இறுத்தபின் பாரச் சந்தேகம் தீர்ந்தது.
    After I paid a fine of ten, doubt was removed.