Page:Tamil proverbs.pdf/442

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
424
பழமொழி.
  1. பத்து அரிசியும் வேகவில்லை, பாவி பிராணணும் போகவில்லை.
    Ten grains of rice wont boil, the life of the wretch wont go.

  2. பத்துக்கு மேலே ஒரு பறையனுக்கும் தள்ளவேண்டும்.
    After ten years of age, a girl should be affianced if even to a pariah.

  3. பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.
    Though you give ten fanams, such haste is bad.

  4. பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.
    Of the ten, you must pass as the eleventh.

  5. பத்து வராகன் இறுத்தோம், என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.
    We were fined ten pagodas, however our doubts were removed.

  6. பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.
    In ten ways a Pariah is trustworthy, but a brahman is not.

  7. பத்து ஏர் வைத்துப் படைமரமும் தோற்றேன் எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?
    Possessed of ten yoke of oxen I lost the plough share; how many yoke did you possess before you lost your waist cloth?

  8. பந்தம் சொன்னார் படைக்காகார்.
    Those who regard relationships are unfit for military service.

  9. பந்திக்கு முந்தவேண்டும் படைக்குப் பிந்தவேண்டும்.
    Be first at a feast, and last at the fight.

  10. பந்தியிலே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்கிறாய்.
    When rejected at the feast, thou sayest that the leaf is torn.

  11. பயணக்காரன் பயித்தியக்காரன்.
    A man about to set out on a journey, is a fool.